அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்


அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்
x

பெண்ணாடம் அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்

பெண்ணாடம்,

பெண்ணாடத்தை அடுத்த தாழநல்லூரில் உள்ள அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவஜனம், கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் முதல்கால யாக பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, 2-வது கால யாக பூஜை, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னா் யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று அய்யனாருக்கும், இதைத் தொடர்ந்து கொப்பட்டியம்மன், கருப்புசாமி, அஞ்சுமா கன்னிகள் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மிது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் தாழநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தா்கள் திரளாக கலந்தகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story