ஆந்தக்குடி ஆதீனமுடைய அய்யனார் கோவில் குடமுழுக்கு
ஆந்தக்குடி ஆதீனமுடைய அய்யனார் கோவில் குடமுழுக்கு
நாகப்பட்டினம்
கீழ்வேளூர் அருகே ஆந்தக்குடி ஊராட்சி திருப்பஞ்சனம் கிராமத்தில் ஆதீனமுடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடந்தது. விழாவில் நேற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கடங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் ஆதினமுடைய அய்யனாருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர், கிராமக்கள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story