கல்லந்தலில் அய்யனாரப்பன் உள்பட 7 கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


கல்லந்தலில் அய்யனாரப்பன் உள்பட 7 கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 10:19 AM GMT)

கல்லந்தலில் அய்யனாரப்பன் உள்பட 7 கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தில் விநாயகர், சுப்பிரமணியர், அய்யனாரப்பன், மாரியம்மன், பொறையாத்தம்மன் உள்ளிட்ட 7 கோவில்கள் தனித்தனியே அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ந்தேதி காலை கோபூஜை, விக்னேஸ்வரபூஜை, தனலட்சுமி யாகம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம், முதல் கால யாக சாலை பூஜை நடந்து மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தனம், யாத்ராதானம் நடந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து 9.15 மணியளவில் அய்யனாரப்பன், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட ஏழு கோவில்களிலும் உள்ள விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில், இரவு பூரணி பொற்கலை சமேத அய்யனார் வீதி உலா காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story