குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் - அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி


குற்றாலத்தில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் - அருவியில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ச்சி
x

குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீரான தண்ணீர் விழுகிறது. இந்நிலையில் விடுமுறை நாளான இன்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் ஆனந்தமாக குளித்துவிட்டு குற்றாலநாதர் கோவிலில் தரிசனம் செய்துனர். மேலும் இன்று வாரஇறுதி விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்து காணப்பட்டது.Next Story