கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் கன்னியாகுமரியில் நேற்று முன்தினம் முதல் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதன்படி நேற்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண குவிந்தனர். ஆனால், கார்மேகம் சூழ்ந்து வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 1 மணிக்கும், இரவு 9 மணிக்கும் நடை அடைக்கப்படுகிறது.

நீண்ட வரிசையில்...

அதன்படி சீசன் தொடங்கிய 2-வது நாள் முதலே பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெட்டி மற்றும் கைப்பை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் வாசலில் போலீசார் 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் தீவிர சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

சபரிமலை சீசன் தொடங்கியதை தொடர்ந்து எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் கன்னியாகுமரி களை கட்டத்தொடங்கி உள்ளது.

இதேபோல் திற்பரப்பிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு அருவியில் பக்தர்கள் குளித்தனர்.


Next Story