களக்காட்டில் அய்யாவழி மாநாடு
களக்காட்டில் அய்யாவழி மாநாடு நடந்தது.
களக்காடு:
களக்காட்டில் வட்டார அய்யாவழி மக்கள் மாநாட்டுக்குழு சார்பில் அய்யா வழி 8-வது மாநாடு நடந்தது. இதையொட்டி மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. பின்னர் திருஏடு வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பிறகு மாலையில் அய்யா நாராயண சுவாமியின் வாகன பவனி நடந்தது. சிறப்பு பணிவிடைகளுக்கு பின் அய்யா நாராயண சுவாமி வாகனத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிவசந்திரன் வாகன பவனியை தொடங்கி வைத்தார். மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயண சுவாமி களக்காடு ரதவீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநாடு நடைபெற்றது. முன்னாள் எம்.பி. ஜெயத்துரை தலைமை தாங்கினார். வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர் மற்றும் பலர் வாழ்த்தி பேசினர். நாரணமே வைகுண்டம், அகிலத்திரட்டில் வாழ்வியல் கருத்து உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பலர் பேசினர். தொடர்ந்து சிவசந்திரனின் அருள் இசை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.