ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீடு அட்டை வழங்கும் பணி தீவிரம்
வேடப்பட்டியில் ஆயுஷ்மான் பாரத் தேசிய காப்பீட்டு திட்ட அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
50 கோடி பயனாளிகள்
ஏழை, தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் மற்றும் தொழிலாளர் குடும்பங்கள் என அணைத்து தரப்பினருக்கும் நவீன, தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை கடந்த 2018 ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது.பிரதம மந்திரி மக்கள் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 கோடி பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்கும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டத்தில் இணைந்த பயனாளி நாடு முழுவதும் உள்ள பொது மற்றும் தேர்வு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை பெற முடியும். இதில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ 5 லட்சம் வரை காப்பீட்டு திட்டத்ஆயுஷ்மான் பாரத் திட்ட காப்பீடு
அட்டை வழங்கும் பணி தீவிரம்தில் பலன் பெற முடியும்.
சிறப்பு முகாம்
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் புதிய பயனாளிகளை இணைக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்டத்தின் பல பகுதிகளில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் வேடப்பட்டியில் நடைபெற்ற ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டை வழங்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது. படிப்படியாக மாவட்டம் முழுவதும் காப்பீட்டு அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.