பா.ஜனதா நிறுவனர் பிறந்தநாள் விழா
தா.பழூரில் பா.ஜனதா நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரியலூர்
பா.ஜனதா நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டி ஜூலை மாதம் 6-ந் தேதி வரை பா.ஜனதா சேவை வாரமாக அனுசரிக்க முடிவு செய்து கட்சியின் மாவட்ட செயலாளர் இளையராஜா மாவட்டம் முழுவதும் இந்த சேவை நிகழ்வுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மாவட்ட தலைவர் அய்யப்பன் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் அனைத்து கிளைகளுக்கும் அவரது படங்கள் வினியோகிக்கப்பட்டன.
இந்தநிலையில் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் அவரது படத்திற்கு மாவட்ட செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். சேவை வாரத்தை நிறைவு செய்யும் வகையில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு கிளைக்கழகங்கள் சார்பில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story