குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை
குடியிருப்பு பகுதியில் உலா வந்த பாகுபலி யானை
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானை மற்றும் பிற வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் காட்டு யானை அடிக்கடி உலா வருகிறது. இந்த யானையை பொதுமக்கள் பாகுபலி என்று அழைத்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாகுபலி நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தது. தொடர்ந்து பாகுபலி யானை சாலையை கடந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் சென்றது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பாகுபலி குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
----
Reporter : A.N.SHANMUGAM Location : Coimbatore - METTUPPALAYAM