பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்த பெண் பலி


பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்த பெண் பலி
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 5:06 PM IST)
t-max-icont-min-icon

துணி துவைத்து கொண்டு இருந்தபோது பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்த பெண் பலியானார்.

கோயம்புத்தூர்

நெகமம்

துணி துவைத்து கொண்டு இருந்தபோது பி.ஏ.பி. வாய்க்காலில் தவறி விழுந்த பெண் பலியானார்.

துணி துவைக்க...

நெகமம் அருகே உள்ள கொண்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி சுந்தரம்மாள்(வயது 51). இவர் நேற்று காலையில் துணி துவைப்பதற்காக அங்குள்ள பி.ஏ.பி. மெயின் வாய்க்காலுக்கு சென்றார்.

கரையில் அமர்ந்து துணி துவைத்து கொண்டு இருந்தபோது, திடீரென கால் தவறி தண்ணீரில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.

தண்ணீரில் மூழ்கினார்

இதன் காரணமாக ஆழமான பகுதிக்கு சென்ற சுந்தரம்மாள், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் தண்ணீரில் குதித்து சுந்தரம்மாளை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

நீண்ட நேரம் போராடி அவரது உடலை மட்டும் மீட்டனர்.

இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story