மானாம்பள்ளி எஸ்டேட்டில் இறந்து கிடந்த குட்டி யானை


மானாம்பள்ளி எஸ்டேட்டில்  இறந்து கிடந்த குட்டி யானை
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மானாம்பள்ளி எஸ்டேட்டில் இறந்து கிடந்த குட்டி யானை

கோயம்புத்தூர்

வால்பாறை

கோவை மாவட்டம் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் மானாம்பள்ளி, சவமலை ஆகிய இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மானாம்பள்ளி எஸ்டேட் காபி தோட்டத்தில் ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கவனித்தனர். இதுகுறித்து அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனப் பாதுகாவலர் செல்வம் தலைமையில் வனச்சரகர் மணிகண்டன் ஆகியோர் அங்கு சென்று இறந்து கிடந்த குட்டி யானையின் உடலை பார்வையிட்டனர். மேலும் கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் மற்றும் கோட்டூர் மலையாண்டி பட்டணத்தின் உதவி கால் நடை மருத்துவர் கவுதம் ஆகியோர் இறந்து கிடந்த குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், இறந்து கிடந்தது 5 வயது குட்டி யானை ஆகும். நிமோனியா காய்ச்சல் காரணமாக குட்டி யானை இறந்திருக்கலாம். எனினும் யானையின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள வனத்துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றனர். இதையடுத்து அந்த குட்டி யானையின் உடல் அதேப்பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.


Next Story