குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்குட்டி யானை நடமாட்டம


குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில்குட்டி யானை நடமாட்டம
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குட்டி யானை நடமாட்டம உள்ளது.

நீலகிரி
குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் முதல் பர்னியார் வரை உள்ள தோட்டங்களில் பலா மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.தற்போது சீசன் என்பதால் பலா மரங்களில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இந்த பலா பழங்களை ருசிக்க குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலைக்கு வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வந்து முகாமிட்டபடி சுற்றித்திரிகின்றன. இந்த நிலையில் குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதை சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று முகாமிட்டு சுற்றித்திரிந்து வருகிறது. மேலும் அந்த குட்டியானை சாலையில் வாகனங்களை அவ்வப்போது விரட்டி வாகன ஓட்டிகளை அச்சமடைய வைக்கிறது. குட்டி யானை நடமாட்டம் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் செல்பவர்கள் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும், காட்டுயானைகளை கண்டால் வாகனங்களை நிறுத்திவிட்டு புகைப்படம், செல்பி எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லவும் அறிவுறுத்தி உள்ளனர்.



Next Story