கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பர்கூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பர்கூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மதியழகன் எம்.எல்.ஏ., பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி வரவேற்றார். கிருஷ்ணகிரி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாவதி, மாவட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து, கர்ப்பகால நடைமுறைகள் குறித்து அறிவுரை வழங்கி பேசினர். பின்னர் கர்ப்பிணிகளுக்கு புடவை, பூ, பழம், மஞ்சள், குங்குமம் அடங்கிய சீர்வரிசையை மதியழகன் எம்.எல்.ஏ. வழங்கினார். இதில் தி.மு.க. மாவட்ட அவை தலைவர் நாகராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.