கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு


கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
x
தினத்தந்தி 23 Nov 2022 6:45 PM GMT (Updated: 23 Nov 2022 6:47 PM GMT)

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சிவகங்கை

மானாமதுரை,

மானாமதுரை சமத்துவபுரத்தில் 100 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம், குங்குமம் பூசி வளைகாப்பை நடத்தினார்கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையொட்டி கர்ப்பிணிகளுக்கு வளையல், ஜாக்கெட் துணி, சில்வர் தட்டு மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் 7 வகையான சாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செய்களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி சுப்ரமணி, மானாமதுரை குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, மேற்பார்வையாளர் அமுதா ராணி, மானாமதுரை நகராட்சி நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகராட்சி துணை தலைவர் பாலசுந்தரம், மானாமதுரை யூனியன் துணை சேர்மன் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் மலைச்சாமி, ராதா சிவச்சந்திரன், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அழகு சுந்தரம், பால்பாண்டி, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட திட்ட அலுவலர் பரமேஸ்வரி செய்திருந்தார்.


Next Story