அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு விழா
அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை
அன்னவாசல் அருகே உள்ள சிறுஞ்சுனையை சேர்ந்தவர் ஜெயந்தி. இவர், அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், புல்வயலை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் காவலர் ஜெயந்திக்கு போலீஸ் நிலையத்தில் வளைகாப்பு நடத்த சக போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அருள் மொழி அரசு, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன் (அன்னவாசல்), உஷாநந்தினி (இலுப்பூர்) ஆகியோர் தலைமையில் காவலர் ஜெயந்திக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது ஜெயந்திக்கு வளையல்கள் அணிவித்தும், சந்தனம், குங்குமம் வைத்தும், 5 விதமான உணவு விருந்து உபசாரம் செய்தும் குடும்ப நிகழ்ச்சியாக நடத்தினர். இதில், சப்- இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், ஜெயஸ்ரீ, சரண்யா உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story