செண்பகவல்லி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வளைகாப்பு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவணநாதர் சுவாமி கோவிலில் நேற்று செண்பகவல்லி அம்மனுக்கு வளைகாப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விளா பூஜை, உச்சி கால பூஜை நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சதை, 4.30 மணிக்கு செண்பகவல்லி அம்மன் கர்ப்பிணி பெண் போல் அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மங்களப் பொருட்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது.
ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்களுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா நண்பர்கள் குழு சார்பில் மஞ்சள் கயிறு, வளையல்களை கோவில் ஆய்வாளர் சிவகலை பிரியா வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில் முன்னாள் அறங்காவலர் திருப்பதி ராஜா மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தார்கள்.
Related Tags :
Next Story






