150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு


150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு
x

தா.பழூரில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலகு சார்பில் 150 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. தா.பழூர் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி தலைமை தாங்கினார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நலுங்கு செய்து பின்னர் வளையல் அணிவிக்கப்பட்டன. இதையடுத்து, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசைகளை வழங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கர்ப்பிணிகளுக்கு கரு உருவாவதில் இருந்து ஆயிரம் நாட்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியங்கள், பயிறு வகைகள், சைவ, அசைவ உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு முருங்கைக்கீரை சூப், கொண்டைக்கடலை சுண்டல், சத்துமாவு கஞ்சி ஆகிய ஊட்டச்சத்து மிகுந்த சிற்றுண்டிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story