கோவில் பசுவிற்கு வளைகாப்பு


கோவில் பசுவிற்கு வளைகாப்பு
x

கோவில் பசுவிற்கு வளைகாப்பு நடந்தது.

கரூர்

கரூர் வாங்கல் சாலையில் உள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தில் நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் கோசலையில் உள்ள பசுவிற்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி கோவில் பசுவிற்கு கண்ணாடி வளையல்கள் அணிவித்து, பட்டு சேலையை கட்டிவிடப்பட்டனர். மேலும் நெத்திச்சூடி அணிவித்து, பசுவின் வாலில் பூக்களால் பின்னி அலங்கரிக்கப்பட்டன. இவ்விழாவில் இனிப்பான தின்பண்டங்களை உணவாக பசுவிற்கு பெண்கள் வழங்கினர்.

ஒரு பெண்ணிற்கு எந்தவகையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறதோ அதைபோல கோவில் பசுவிற்கும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி பெண்கள் அழகு பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு ஏழு வகையான கலவை சாதங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.


Next Story