தாமிரபரணி ஆற்றில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு


தாமிரபரணி ஆற்றில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு
x

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் பச்சிளம் குழந்தை உடல் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் சுலோச்சன முதலியாா் பாலத்தின் கீழ் தாமிரபரணி ஆற்றில் நேற்று மாலையில் குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. அப்போது அங்கு குளித்துக்கொண்டு இருந்த நபர்கள் நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட குழந்தை பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை என்று போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து குழந்தையை யாரேனும் ஆற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story