பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்


பிற்படுத்தப்பட்ட சமுதாய உரிமை கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கூட்டமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி தலைமை தாங்கி பேசும் போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டில் இன்றுவரை 12 சதவீதத்திற்கும் மேல் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படவில்லை.

பல மத்திய பல் கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் 24 மனை தெலுங்கு செட்டியார் கூட்டமைப்பு அமைப்பாளர் ஆர்.எஸ்.சண்முகம், கூட்டமைப்பின் துணை தலைவர் வெள்ளிங்கிரி, செயலாளர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story