பூப்பந்தாட்ட போட்டி; சென்னை- கர்நாடக அணிகள் வெற்றி


பூப்பந்தாட்ட போட்டி; சென்னை- கர்நாடக அணிகள் வெற்றி
x

காயல்பட்டினத்தில் நேற்று நடந்த அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில் சென்னை, கர்நாடக அணிகள் வெற்றி பெற்றது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் ரெட் ஸ்டார் சங்கம் சார்பில் அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்தப் போட்டியானது லீக் மற்றும் சூப்பர் லீக் முறையில் நடைபெறுகிறது. நேற்று 2-வது நாளாக நடைபெற்ற போட்டியில் முதல் ஆட்டத்தில் சென்னை பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசன்ட் பல்கலைக்கழக அணியும், சென்னை ஸ்பார்டன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் விளையாடியது. இதில் கிரசன்ட் பல்கலைக்கழக அணி 35-34, 35-24 என்ற புள்ளி கணக்கில் வென்றது. 2-வதாக நடைபெற்ற போட்டியில் தென்னக ெரயில்வே அணியும், சென்னை எஸ்.ஆர்.எம். அணியும் விளையாடியது. இதில் 35-29, 35-24 என்ற புள்ளி கணக்கில் தென்னக ரெயில்வே அணி வெற்றி பெற்றது.

3-வதாக நடைபெற்ற போட்டியில் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த ஆல்வாஸ் பல்கலைக்கழக அணியும், கேரளா பைல்ஸ் அணியும் விளையாடியது. இதில் 35-31, 35-29 என்ற புள்ளிக்கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. இன்று நடைபெறும் ஆட்டங்கள் சூப்பர் லீக் முறையில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் 4 அணிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்படுகிறது.


Next Story