பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு
சீர்காழி பத்ரகாளியம்மன் கோவில் குடமுழுக்கு திரளான பக்தர்கள் பங்கேற்றனர்
சீர்காழி:
சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன், ஏழைகாத்த அம்மன் கோவில்களின் குடமுழுக்கு நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 16-ந் தேதி பூர்வாங்க பூஜைகளும், 18-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 7 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்தன. முதலில் விநாயகர் சன்னதி, அதனை அடுத்து ஏழைகாத்தம்மன், அங்காளம்மன் கோவில் கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் 7.40 மணிக்கு பத்ரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதிஉலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.