பேய்க்குளம், தச்சமொழி கோவிலில்திருவிளக்கு பூஜை


பேய்க்குளம், தச்சமொழி கோவிலில்திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேய்க்குளம், தச்சமொழி கோவில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

பேய்க்குளம் சங்கரலிங்கசுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், அம்பாள் மற்றும் சுவாமி பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி பிரகார வீதி உலா வந்தார்.

இதேபோன்று சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பெண்கள் பங்கேற்று திருவிளக்கு ஏற்றி அம்பாளை வழிப்பட்டனர். தொடர்ந்து அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


Next Story