பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்


பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்
x

பொள்ளாச்சி மார்க்கெட்டில் வெற்றிலை ஏலம்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி, மே.29-

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வெற்றிலை ஏலம் நடைபெறுவது வழக்கம். இங்கிருந்து தான் பொள்ளாச்சி சுற்று வட்டாரம் மற்றும் கேரளாவுக்கு வெற்றிலை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் ஏலம் நடைபெற்றது.

ஏலத்திற்கு ஆனைமலை, சமத்தூர், பெரியபோது, வாழைக்கொம்பு நாகூர் மற்றும் கோவை நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலையை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். வியாபாரிகள் ஏலத்தில் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். ஒரு கட்டு வெற்றிலை ரூ.2500 வரை ஏலம் போனது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், பொள்ளாச்சி மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்திற்கு 800 முதல் 900 வரை வெற்றிலை கட்டுக்கள் ஏலத்திற்கு கொண்டு வரப்படும். ஒரு கட்டுக்கு 8 ஆயிரம் வெற்றிலை இருக்கும். தற்போது சாகுபடி பரப்பளவு குறைந்ததால் அதிகபட்சம் 200 கட்டுகள் தான் கொண்டு வரப்படுகிறது. இந்த வாரம் 150 கட்டுக்கள் கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்து உள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story