நாங்குநேரி சம்பவத்தில் கைதான 6 மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி


நாங்குநேரி சம்பவத்தில் கைதான 6 மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

நாங்குநேரியில் வீடுபுகுந்து மாணவர்-தங்கையை அரிவாளால் வெட்டிய வழக்கில் கைதான 6 மாணவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை, அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோரை சக மாணவர்கள் உள்ளிட்ட கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் நெல்லை பல்நோக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவர்கள் 6 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நெல்லை புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்த நிலையில் கைதான மாணவர்கள் தரப்பில், நெல்லை சிறுவர் நீதிகுழுமத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்பு வக்கீல் பா.பா.மோகன் ஆஜராகி மாணவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று வாதிட்டார்.

தொடர்ந்து மாணவர்களின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story