ஜாமீனில் வந்த தொழிலாளி கொலை
வத்திராயிருப்பு அருகே ஜாமீனில் வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
வத்திராயிருப்பு அருகே ஜாமீனில் வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.
ஜாமீனில் வந்தார்
வத்திராயிருப்பு அருகே உள்ள அர்ச்சுனாபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது52). இவர் கடந்த மார்ச் மாதம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (37) என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
அதன்பிறகு கேரளாவுக்கு சென்று விட்டார். அங்கு வேலை பார்த்து வந்த முருகன் தீபாவளி பண்டிக்கைகாக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் வத்திராயிருப்பில் இருந்து அர்ச்சுனாபுரம் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் உறவினர் பாண்டி என்பவருடன் சென்றார்.
கழுத்தை அறுத்து கொலை
அப்போது அங்கு மாரியப்பனின் மகன் ரஞ்சித்குமார் (24) உள்பட 6 பேர் வந்தனர். அவர்கள் முருகனை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து தாக்கினர். பின்பு ரஞ்சித்குமார் தன்னிடம் இருந்த கத்தியால் முருகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள் 6 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து முருகனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது உறவினர் பாண்டி வத்திராயிருப்பு போலீஸ்நிைலயத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.