அம்பை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை


அம்பை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை
x

அம்பை, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.

திருநெல்வேலி


அம்பை:

அம்பையில் ஜாமியா பள்ளிவாசல், முகைதீன் கீழப்பள்ளிவாசல், தவ்ஹீத் பள்ளி ஆகிய இடங்களிலும், கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜூம்ஆ பள்ளிவாசல், ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் சின்னப்பள்ளிவாசல், தெற்கு தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியர் தெரு பள்ளிவாசல், தவ்ஹீத் திடல், நெசவாளர் காலனி பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் பக்ரீத்ட சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அம்பை கிளை சார்பில் தவ்ஹீத் பள்ளிவாசல் எதிரே உள்ள இடத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நெல்லை மாவட்ட பேச்சாளர் அப்துல்லாஹ் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் அம்பை கிளை தலைவர் அப்துல் ரஹ்மான், செயலாளர் கோதர், துணைத்தலைவர் சேக் பாபு உள்பட முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேட்டை மேற்கு கிளை சார்பில் பேட்டை மஸ்ஜிதுர் ரஹீம் பள்ளிவாசல் அருகில் உள்ள திடலில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் பாசித், பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் திரளாக கலந்து கொண்டனர்.

களக்காடு போலீஸ் நிலையம் அருகில் உள்ள திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கோட்டை ஜமாத், வியாசராஜபுரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம்பத்து ஜமாத் ஆகிய பகுதிகளில் இருந்து திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஏற்பாடுகளை கோட்டை ஜமாத் இளைஞர்கள் செய்திருந்தனர். பின்னர் முஸ்லிம்கள் தங்களது வீட்டில் வளர்க்கப்பட்ட ஆடுகளை குர்பானி கொடுத்தனர்.


Next Story