கோவையில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
கோவை
கோவையில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு தொழுகை
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை இன்று முஸ்லிம்கள் கொண்டாடினார்கள். இதையொட்டி கோவை பூமார்க்கெட்டில் உள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் பள்ளிவாசல், ஒப்பணக்காரவீதியில் உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசல், ராம் நகரில் உள்ள பள்ளிவாசல் உள்பட கோவை மாநகர பகுதியில் உள்ள 130-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது. இதுபோன்று மாவட்டம் முழுவதும் 313 பள்ளிவாசல்கள் 40 மைதானங்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
இதற்காக அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து, புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். குறிப்பாக ஜமாத்தே இஸ்லாம் அமைப்பு சார்பில் கோவை கரும்புக்கடையில் உள்ள மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டுடனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் தியாகத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
உலக அமைதிக்காக...
பின்னர் இஸ்லாமிய மரபுபடி குர்பானி கொடுப்பதற்காக, ஏழை-எளிய மக்களுக்கு ஆட்டு இறைச்சியை பங்கிட்டு கொடுத்து மகிழ்ந்தனர். இந்த தொழுகையின்போது பெண்களுக்கு அந்தந்த இடங்களில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் அங்கு தொழுகையில் ஈடுபட்டனர். இது குறித்து முஸ்லிம்கள் சிலர் கூறும்போது, பக்ரீத் பண்டிகையையையொட்டி நேற்று நடந்த சிறப்பு தொழுகையில் உலக அமைதிக்காவும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்றும் மக்கள் நோய்நொடி இல்லாமல் நன்றாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
அதுபோன்று ஏராளமான ஆடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது. இவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்ட ஆடுகளை 3 பங்காக பிரிக்கப்பட்டது. அதில் ஒரு பங்கு ஏழை-எளிய மக்களுக்கும், மற்றொரு பங்கு உற்றார் உறவினர்களுக்கும், மற்றொரு பங்கை குர்பானி கொடுத்தவர்கள் தங்களுக்கும் எடுத்துக்கொண்டனர். அதுபோன்று சிலர் பிரியாணி சமைத்தும் ஏழை-எளிய மக்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர் என்றனர்.