சேலம் மாநகராட்சி ஆணையாளராக பாலசந்தர் பொறுப்பேற்பு


சேலம் மாநகராட்சி ஆணையாளராக பாலசந்தர் பொறுப்பேற்பு
x

சேலம் மாநகராட்சி ஆணையாளராக பாலசந்தர் பொறுப்பேற்றார்.

சேலம்

சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தவர் கிறிஸ்துராஜ். இவர், திருப்பூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டராக (வளர்ச்சி) பணியாற்றி வந்த சீ.பாலசந்தர், மாநகராட்சி புதிய ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டார். நேற்று அவர் சேலம் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மேயர் ராமச்சந்திரனை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். அப்போது, புதிய ஆணையாளருக்கு மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சீ.பாலச்சந்தர், 2018-ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சப்-கலெக்டராகவும், தொடர்ந்து சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டராகவும் (வளர்ச்சி) பணியாற்றி உள்ளார்.

மேலும், மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமார், கண்காணிப்பு பொறியாளர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரும் புதிய ஆணையாளர் சீ.பாலச்சந்தரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story