ராஜகோபுரத்திற்கு பாலாலய பூஜை
ராஜகோபுரத்திற்கு பாலாலய பூஜை 4-ந் தேதி நடக்கிறது
திருப்பூர்
அவினாசி
அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகை உடனமர்அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக திருப்பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மாதம் 23-ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு ஹோமம் நடத்தி பாலாலயம் செய்யப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக அவினாசிலிங்கேசுவரர் ஏழுநிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் செய்ய உள்ளதாக கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் மற்றும் அறங்காவலர்கள் தெரிவித்தனர். அதன்படி 4-ந் தேதி காலை 9 மணியளவில் சிறப்பு வழிபாடு, ஹோமம் மற்றும் பாலாலயம் நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story