மகா மாரியம்மன் கோவிலில் பாலாலயம்


மகா மாரியம்மன் கோவிலில் பாலாலயம்
x

மகா மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் கடைவீதியில் உள்ள பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்றது. பின்னர் இந்த கோவிலில் திருப்பணிகளும், கும்பாபிஷேகமும் நடைபெறவில்லை. இந்நிலையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு ஆய்வு செய்ய வந்தபோது, மகா மாரியம்மன் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி, பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையர், இணை மற்றும் உதவி ஆணையர்கள் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கிட ஆணை வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மகா மாரியம்மன் கோவிலில் சிவாச்சாரியார்கள் பாலாலயம் பூஜை செய்து, கும்பாபிஷேக திருப்பணி தொடங்கிட யாகசாலை அமைத்து, கடங்கள் புறப்பாடு செய்து சக்தி அழைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.


Next Story