வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்


வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம்
x

வேட்டவலம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியதை தொடர்ந்து நேற்று பாலாலயம் நடந்தது. திருக்கோவிலூர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிலைகளுக்கு பாலாலயம் நடந்தது.

இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜமீன்தாரணி லலிதா அம்மாள், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் குமரேசன், கீழ்பென்னாத்தூர் சரக ஆய்வாளர் அன்பழகன், அகத்தீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரகுவர ராஜ்குமார் மற்றும் திருப்பணி குழுவினர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story