பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழா -கரும்பு தொட்டில், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
பாலமேடு பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாவில் கரும்பு தொட்டில், பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு தனித்து புராதன பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. நேற்று பால்குடம், கரும்பு தொட்டில், மாவிளக்கு, அலகு குத்துதல், அங்கப்பிரதட்சணம் மற்றும் தீ சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை பக்தர்கள் செலுத்தினர். இதில் முன்னதாக பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம், கண் திறப்பு விழா நடைபெற்றது. பின்னர் அன்று இரவு பத்திரகாளியம்மனுக்கு, மாரியம்மன் சக்தி கரகம், அலங்காரம் செய்து வாண வேடிக்கையுடன் நகர்வலம் வந்தது. பின்னர் அன்று இரவு மாரியம்மனுக்கு பொங்கல் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவையொட்டி மதுரை, திண்டுக்கல், தேனி, சென்னை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதில் மாரியம்மனும், பத்திரகாளியம்மனும், கருப்பு சுவாமியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
விழாவில் இன்று வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான விழா ஏற்பாடுகளை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.