பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழாf


பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழாf
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுக்குப்பம் பாலசுப்பிரமணியசாமி கோவில் செடல் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அடுத்த பாவந்தூர் மதுரா மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் காவடி பூஜை, செடல் திருவிழா மற்றும் அன்னதான விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு்க்கான விழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு சாமி வீதி உலாவும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காவடிபூஜை, செடல் திருவிழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 27-ந்தேதி விடையாற்றி உற்சவமும், இடும்பன் பூஜையும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள், கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் கிராமபொதுமக்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story