சங்கராபுரத்தில் பாலசுப்பிரமணியர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


சங்கராபுரத்தில் பாலசுப்பிரமணியர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM (Updated: 11 Dec 2022 6:45 PM)
t-max-icont-min-icon

சங்கராபுரத்தில் பாலசுப்பிரமணியர், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் சன்னதி தெருவில் வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக செல்வவிநாயகர், மணிமங்கல நாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், அய்யப்பன் ஆகிய சாமிகளுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கோவிலுக்கு அருகே திரவுபதி அம்மன் கோவிலும் அதன் உள்ளே கிருஷ்ணர் தனி சன்னதியும் புதிதாக கட்டப்பட்டது.

இந்த கோவில்களின் கும்பாபிஷேகம் கடந்த 9-ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து லட்சுமி, நவக்கிரக, சுதர்சன ஹோமம், விக்னேஸ்வர பூஜை, முதல் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.

பின்னர் நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜை, பன்னிரு திருமுறை பாராயணம், சதுர்வேத பாராயணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக நாளான நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜை, கோபூஜை, நாடி சந்தானம் நடந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திரவுபதி அம்மன், கிருஷ்ணர் கோவில் கலசத்திற்கும் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து செல்வவிநாயகர், மணிமங்கலநாயகி சமேத சங்கரலிங்கேஸ்வரர், வள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியர், அய்யப்பன் ஆகிய சாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 'பக்தி சரம்' என்ற தலைப்பில் வாசுகி மனோகரனின் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், பரம்பரை அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story