பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்


பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஏரிப்பாளையம் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கடலூர்

பண்ருட்டி அருகே சேமக்கோட்டை மதுரா எஸ்.ஏரிப்பாளையத்தில் பாலசுப்பிரமணியர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையடுத்து, நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதனை திருக்கைலாய கந்தபரம்பரை சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது சன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கோ பூஜை, ரக்ஷா பந்தனம், யாக சாலை பூஜை நடைபெற்றது.

இன்று (சனிக்கிழமை) விசேஷ சந்தி, திரவ்யாகுதி, அஷ்டபந்தனம் சாத்துதல், விமான கலச ஸ்தாபனம், பூர்ணாகுதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிதம்பரம் மவுனமடம் ஸ்ரீமத் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் நடக்கிறது. இதையொட்டி காலை 7 மணி அளவில் பிம்மசுத்தி, நாடி சந்தானமும், 10 மணி அளவில் யாத்ராதானம், கடம் புறப்பாடும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் பாலசுப்பிரமணியர் கோவில் விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் விநாயகர், தேச மாரியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story