பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி குழு ஆலோசனை கூட்டம்
பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி குழு ஆலோசனை கூட்டம் நடநத்து.
கரூர்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி குழு ஆலோசனை கூட்டம் புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கோவில் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு திருப்பணி குழு கவுரவ தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசுப்ரமணியம், திருப்பணி குழு தலைவராக புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன், செயலாளராக குமரன் குடில் கார்த்திகேயன், துணைத் தலைவராக அண்ணாவேலு, துணைச் செயலாளராக நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திருப்பணிக் குழு நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், நகர்மன்ற துணை தலைவர் பிரதாபன் மற்றும் கோவில் திருப்பணிக்குழு நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை வழங்கினர்.
Related Tags :
Next Story