பாறு கழுகுகளை பாதுகாக்க வேண்டும்


பாறு கழுகுகளை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 2 Sep 2023 11:30 PM GMT (Updated: 2 Sep 2023 11:30 PM GMT)

மசினகுடியில் நடந்த பாறு கழுகுகள் தின விழிப்புணர்வு பேரணியில், பாறு கழுகுகளை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

நீலகிரி

கூடலூர்

மசினகுடியில் நடந்த பாறு கழுகுகள் தின விழிப்புணர்வு பேரணியில், பாறு கழுகுகளை பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

விழிப்புணர்வு பேரணி

உலக பாறு கழுகுகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடியில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி முக்கிய சாலை வழியாக சென்று வனத்துறை சோதனைச்சாவடியை அடைந்தது.

பேரணியில் வனச்சரகர்கள் தயானந்தன், ஜான் பீட்டர், பாலாஜி உள்பட பள்ளி மாணவர்கள், வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். பாறு கழுகுகளை பாதுகாப்போம் போன்ற விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி சென்றனர். முன்னதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு இடங்களில் பாறு கழுகுகள் குறித்து பறை இசை அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஆடியோ வசதி

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வலிநீக்கி மருந்துகளான டைகுளோபினாக், கீட்டோபுரோபைன் உள்ளிட்ட சில மருந்துகள் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இறுதியாக கால்நடைகள் இறந்த பிறகு பாறு கழுகுகள் அதன் உடலை சாப்பிடும்போது வலி நீக்கி மருந்துகளால் பாதிக்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு சில வலி நீக்கி மருந்துகளை தடை செய்துள்ளது. எனவே, பொதுமக்கள் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மருந்துகள் மற்றும் ஆயுர், சித்தா மருத்துவத்தில் உள்ளது. அதை பயன்படுத்தி பாறு கழுகுகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றனர். தொடர்ந்து அனைவரும் பாறு கழுகுகளை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் அறிவுறுத்தலின் பேரில், முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாறு கழுகுகள் குறித்த ஆடியோ பதிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்பட 8 மொழிகளில் ஆடியோ பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதை துணை இயக்குனர் வித்யா நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் பாறு கழுகுகள் குறித்த முழு விவரங்களை சுற்றுலா பயணிகள் தங்களது மொழிகளில் கேட்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story