நாகாலம்மன் கோவிலில் பால்குட அபிஷேக பெருவிழா
குடியாத்தம் நடுப்பேட்டை நாகாலம்மன் கோவிலில் பால்குட அபிஷேக பெருவிழா நடைபெற்றது.
குடியாத்தம் டவுன் நடுப்பேட்டை ராஜாஜி வீதியில் அமைந்துள்ள நாகாலம்மன் கோவிலில் நாக சதுர்த்தியை முன்னிட்டு பால்குட அபிஷேக திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நடுப்பேட்டை பெரிய வாணியர் வீதியில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடங்களை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நாகாலம்மன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேக திருவிழா செய்தனர்.
நிகழ்ச்சிக்கு நகரமன்ற உறுப்பினர் இந்துமதி கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். என்.மோகன், அக்ரி பாலாஜி, சோமய்யா பாலாஜி, எஸ்.பாண்டியன், ஆர்.ரங்கநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ரேணுகாபாபு, தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்கார நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர்கள் க.கோ.நெடுஞ்செழியன், த.பாரி, கே.தண்டபாணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர், அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.