மகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
குத்தாலம் அருகே மகாகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி ஊராட்சி அஞ்சாறுவார்த்தலை பழைய தெருவில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் கரகம், பால்குட திருவிழா நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மகாகாளி மூல மந்திர ஹோமம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கரகம், பால்குட திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக குத்தாலம் காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து கரகம், பால்குடம் எடுத்த பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாைவயொட்டி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. திருவிளக்கு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.