மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட விழா


மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட விழா
x

மருங்காபுரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது.

திருச்சி

மருங்காபுரியில் பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று பால்குட விழா நடைபெற்றது. அய்யா குளத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் தாரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது.


Next Story