சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

சிந்தலவாடி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

கரூர்

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், லாலாபேட்டை அருகே சிந்தலவாடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வைகாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று 100-க்கும் மேற்பட்டவர்கள் லாலாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பால், விபூதி, சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

1 More update

Next Story