கருமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


கருமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

கருமாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே ஒரத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரத்தூர் மேலேறி கரையில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, விரதம் இருந்த பக்தர்கள் மாலை 4 மணியளவில் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வந்து கருமாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story