கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்


கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம்
x

கருமாரியம்மன் கோவிலுக்கு பால்குட ஊர்வலம் நடந்தது.

திருச்சி

திருச்சி முதலியார்சத்திரம், பெல்ஸ் கிரவுண்ட் அருகே உள்ள விஷம் நீக்கி உயிர்கொடுத்த தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் 42-ம் ஆண்டு ஆடிமாத திருவிழா, கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி மற்றும் முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் தீ மிதித்தனர். அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. வருகிற 29-ந் தேதி மாலை குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. மேலும் ஆடிப்பூரத்தையொட்டி வருகிற 1-ந் தேதி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Next Story