22 வழக்குகளுக்கு ரூ.2¼ கோடி தீர்வு


22 வழக்குகளுக்கு ரூ.2¼ கோடி தீர்வு
x
திருப்பூர்


பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் 31 வழக்குகள் எடுக்கப்பட்டு 22 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு தொகையாக ரூ.2 கோடியே 37 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில் கடந்த 2022-ம் ஆண்டில் பல்லடம் அருகே கரையாம்புதூரில் நடந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து நடந்தது. இந்த விபத்தில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் பலியானார். இந்த வழக்கில் அவருடைய மனைவி உஷாவுக்கு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில் இழப்பீடாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் பாலக்குமார், செல்வராஜ், மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story