வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளராக பாலு பொறுப்பேற்பு


வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளராக பாலு பொறுப்பேற்பு
x

வால்பாறை நகராட்சி புதிய ஆணையாளராக பாலு பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த சுரேஷ்குமார் திருச்சி மாவட்டம் துரையூர் நகராட்சிக்கு மாறுதல் பெற்று சென்றார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சியில் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலு என்பவர் வால்பாறை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம் தலைமையில் அலுவலக பணியாளர்கள் புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்கள் கூறி வரவேற்றனர். நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் கவுன்சிலர்கள் புதிய ஆணையாளருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். வால்பாறை நகராட்சி வளர்ச்சி பணிகளுக்கும், சுகாதார நடவடிக்கைகளுக்கும், பொது மக்களின் அனைத்து அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையாளர் பாலு தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story