19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை


19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
x

கொல்லிமலை ஒன்றியத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன என கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

பிளாஸ்டிக் பொருட்கள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் படி கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்காமல் இருக்கவும், பொது சுகாதார கேடு ஏற்படுவதை தடுக்கவும் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்ய தீர்மானித்து உள்ளோம்.

அதன்படி அனைத்து தடிமனாலான பிளாஸ்டிக் பைகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், கத்திகள், பிளாஸ்டிக் உறிஞ்சும் குழல், காகித கப்புகள், காகித டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிறவகை தெர்மகோல், நெய்யப்படாத வகையிலான பைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் சமையலர் தொப்பிகள், பிளாஸ்டிக் கையுறைகள்,

தடை

பிளாஸ்டிக் குடிநீர் பாக்கெட்டுகள், சில்வர் பூச்சு கொண்ட பைகள், பிளாஸ்டிக் பேக்கிங் செய்யப்படும் பொருட்கள், பூச்செண்டுகள் மற்றும் பரிசு பொருட்கள் சுற்றப் பயன்படும் பிளாஸ்டிக்குகள், லேமினேஷன் செய்யப்பட்ட காக்கி தாள்கள், லேமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், பிளாஸ்டிக் வாழை இலை வடிவ தாள்கள் மற்றும் பிளாஸ்டிக் தோரணங்கள் என 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story