குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை


குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை
x

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

இதற்கிடையில், அருவியில் சீராக தண்ணீர் வரத்து இருந்ததால், சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், நேற்று பிற்பகலில் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் வந்துகொண்டிருந்ததால், குறைவான எண்ணிக்கையில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்

இந்த நிலையில், தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து நீடித்ததால், குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் 3-வது நாளாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story