156 டன் விதைக்கடலை விற்பனை செய்ய தடை


156 டன் விதைக்கடலை விற்பனை செய்ய தடை
x

ஆலங்குடியில் 156 டன் விதைக்கடலை விற்பனை செய்ய அதிகாரிகள் தடைவிதித்தனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து, ஆலங்குடியில் விதைக்கடலை வியாபாரம் களைகட்டி உள்ளது. அதேவேளையில், தரமில்லாத விதைக்கடலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த பல்வேறு புகார்களை தொடர்ந்து விதை ஆய்வு துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் ஆலங்குடியில் விதைக்கடலை விற்பனை செய்யும் கடைகளில் நேற்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆந்திரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து, சான்று அட்டைகள் இல்லாத, தரமில்லாத கடலைகளை விதைக் கடலையாக விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.59 கோடி மதிப்புள்ள 156 டன் கடலைகளை விற்பனை செய்ய தடை விதித்தும், சான்று பெற்று விற்பனை செய்யுமாறும் விற்பனையாளர்களுக்கு அலுவலர்கள் அறிவுறுத்தினர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story