527 கிலோ விதைகளை விற்க தடை


527 கிலோ விதைகளை விற்க தடை
x

விழுப்புரம் மாவட்டத்தில் 527 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்

விழுப்புரம்

விழுப்புரம்

அதிகாரிகள் ஆய்வு

வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர்கள் சோமு, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான விதை ஆய்வுக்குழுவினர் விழுப்புரம் பகுதியில் உள்ள விதை விற்பனை மற்றும் விதை உற்பத்தி நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது மாவட்டத்தில் 2 அரசு மற்றும் 20 தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த சம்பா பட்ட நெல் வகைகள், வீரிய ஒட்டு மக்காச்சோள ரகங்கள், வீரிய ஒட்டு பருத்தி ரகம், உளுந்து ரகமான வம்பன் 8, மேம்படுத்தப்பட்ட நெல் ரகமான கிருஷ்ணா பொன்னி போன்ற விதைக்குவியல்களின் தரத்தினை அறிய 26 விதை மாதிரிகள் எடுத்து விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பினர்.

விதைகளுக்கு விற்பனை தடை

மேலும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல், வீரிய ஒட்டு மக்காச்சோளம், சுரைக்காய், பூசணிக்காய், அவரை மற்றும் வீரிய ஒட்டு முள்ளங்கி ஆகிய விதைக்குவியல்களுக்கு ஆவணங்கள் இல்லாதது கண்டறிந்து ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 246 மதிப்புள்ள 527 கிலோ விதைகளை விற்பனை செய்ய தடை விதித்து விதைச்சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது விதை ஆய்வாளர்கள் முருகன், நடராஜன், கவுதமி, சுமதி, ஜோதிமணி, நடராஜன், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story